தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் மேலும்நீடிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவை இந்த மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறுகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை,விமல் வீரவங்ச தாக்கல் செய்திருந்த பிணை மனுவும் இன்றைய தினம்நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விமலின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தனது மகளுக்கு சுகயீனம் காரணமாக தனக்கு பிணை வழங்குமாறு, விமல் வீரவங்ச கூறியிருந்தார்.
இருப்பினும்,மகளின் உடல் நலக் குறைவு தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், குறித்த பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.