யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மாவட்டத்தின் சுகாதார நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இச் சந்திப்பில் அமைச்சருடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலை அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென கோரி கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்திவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், சுகாதார அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.