Loading...
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை – ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – தேவைக்கு
புதினா – 2 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 300 மில்லி
செய்முறை:
* புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.
* இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.
Loading...
* எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
* இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.
* அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.
* சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.
Loading...