பிறந்த சிசு ஒன்றை கொலை செய்து கிணற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து நேற்றைய தினம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துறைநீலாவனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே கடந்த 27ஆம் திகதி குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் கடந்த முதலாம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து தம்பதியினர் வாழ்ந்து வந்த நிலையில், அந்த வீட்டில் துறைநீலாவனை பகுதியை சேர்ந்த ஒருவர் பணிப்பெண்ணாக இருந்துள்ளார்.
இந்நிலையிலேயே, குறித்த பெண் சிசுவை பிரசவித்துள்ளதாகவும், தனக்கு பிறந்த சிசுவை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.