Loading...
பதுளை, எல்ல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹலிஎல பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பணி முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ் ஒன்றில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஸ் நடத்துனரும் மற்றும் இரண்டு நபர்கள் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
Loading...
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
தாக்குதலுடன் தொடர்புடைய பஸ் நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...