Loading...
இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பதோடு, பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கடும் இடி மற்றும் மின்னல் தாக்கம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த வகையில் 34 பாகை செல்சியஸிற்கு அதிகரித்த வெப்பம் நிலவும் எனவும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடிமின்னல் தாக்கம் காணப்படும் சந்தர்ப்பத்தில் கடும் காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும், பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...