Loading...
வாஸ்து சாஸ்திரங்களின்படி, நம்மிடம் உள்ள பணக் கஷ்டங்கள் நீங்க வீட்டில் ஒருசில மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
Loading...
வீட்டில் பணப் பிரச்சனைகளை போக்க என்ன செய்ய வேண்டும்?
- வாஸ்துவின் படி, வீட்டிலேயே படுக்கை அறையில் தான் அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகரிக்கும். எனவே படுக்கை அறையின் சுவர்களில் விரிசல் அல்லது பெயிண்ட் உரிந்து பாதிப்படைந்திருந்தால், தாமதிக்காமல் உடனே அதை சரி செய்ய வேண்டும்.
- வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருந்தால், பூஜை அறையில் சங்கு அல்லது கிளிஞ்சல்களை வைக்க வேண்டும். ஏனெனில் கடலில் இருந்து கிடைக்கும் சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்புடையதால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
- வீட்டில் கட்டிலின் கால்கள் உடைந்திருந்தாலோ, அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடைந்திருந்தாலோ, அதை உடனே தூக்கி எரிந்து விட வேண்டும். எனெனில் அவைகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பணக் கஷ்டத்தை அதிகரிக்கும்.
- வீட்டில் உள்ள குழாய்களில் எப்போதும் தண்ணீர் வடிந்தவாறு இருந்தால், அதை உடனே சரிசெய்ய வேண்டும். எனெனில் அந்த நீர் வீணாவது போல பணமும் வீணாய் செலவாகும்.
- பணத்தை சேமித்து வைக்கும் அலமாரி அல்லது பீரோவை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கியவாறு வைக்க வேண்டும்.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
Loading...