பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது மகளை மாற்றாந்தந்தைக்கு விருந்தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
Warwickshire பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர், தனது புதிய கணவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னால் கருத்தரிக்க முடியாது என அறிந்த பெண், தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் மூலம் குழந்தை பெற்றேடுக்க முடிவு செய்துள்ளார்.
அதற்காக, தனது புதிய கணவருக்கு 12 மகளை விருந்தாக்கியுள்ளார். பின்னர், இருவரும் கர்ப்பமான சிறுமியை கண்காணித்து வந்துள்ளனர். தகவலறிந்த பொலிசார் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாற்றாந்தந்தைக்கு 18 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.