Loading...
இலங்கை வந்துள்ள ஜேர்மன் சபாநாயகர் நோர்பேட் லெம்மர்ட் (Norbert Lammert) தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Loading...
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் தெளிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தேவையான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...