Loading...
கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்குச் சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் துறைமுக பணியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இலங்கை படற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
அதன்படி துறைமுகப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் இரு விரைவு கப்பல்கள் கடற்படையினரால் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, கப்பல் பணியாளர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பனாமா கொடியுடன் பயணித்த ‘டேனியல்’ எனும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது.
Loading...