சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க,
கடந்த “2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புதவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக நபர்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் புனர்நிர்மாண அதிகாரசபையின் மூலம் இலங்கை வங்கியின் ஊடாக சலுகைக் கடன் யோசனைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இத்திட்டத்தின் கீழ் 5,222 பயனாளிகளுக்கு 770.1 மில்லியன் ரூபாய் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட 497 மில்லியன் ரூபா தொகையினை பயனாளிகள் திரும்பச் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, அறவிடப்பட்ட கடன் தொகையானது, சுழற்சி அடிப்படையில் குறித்த பயனாளிகளுக்கே வழங்குவதற்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கை வங்கி அறிவித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட சலுகைக்கடனைத் திரும்பச் செலுத்திய பயனாளிகளுக்கே அந்த தொகையை சுழற்சி முறையில் மீண்டும் சலுகைக் கடனுதவியாக வழங்குவதற்கு அமைச்சரவை என்றார்.