ஒருவருடைய கையில் உள்ள திருமண ரேகையானது, திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி என்ன சொல்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
திருமண ரேகை
கையில் சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே உள்ள ரேகை திருமண ரேகை ஆகும்.
திருமண வயது
இதய ரேகையில் இருந்து சுண்டுவிரலின் அடித்தளம் வரை 50 வருடங்களாக கருதப்படுகிறது. இதைக் கொண்டு தான் திருமணம் எந்த வயதில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 வயதிலும், நடுவில் இருவில் இருந்தால் 25-30 வயதிற்குள், சுண்டுவிரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேல் திருமணம் நடக்கும் என்று அர்த்தம்.
நீளம் மற்றும் குட்டையான திருமண ரேகை
உங்கள் கையில் சுண்டுவிரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒரு ரேகை நீளமாகவும், ஒரு ரேகை குட்டையாகவும் இருந்தால், அதில் நீளமான ரேகை திருமணத்தையும், குட்டையானது காதல் முறிவையும் குறிக்கிறது.
இரண்டு அடர்த்தியான திருமண ரேகை
ஒருவருடையை கையில் அடர்த்தியான மற்றும் ஒரே நீளமுள்ள இரண்டு திருமண ரேகைகள் இருந்தால், அவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
சுண்டுவிரலுக்கு அருகில் திருமண ரேகை
திருமண ரேகை சுண்டுவிரலுக்கு அருகில் இருந்து, நீங்கள் சீக்கிரமாக 20-25 வயதிலேயே திருமணம் செய்து கொண்டால், அதனால் உங்கள் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.
திருமண ரேகையின் குறுக்கே ரேகை
திருமண ரேகைக்கு குறுக்கே சிறு ரேகை இருந்தால், அது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதுடன், விவாகரத்து வரை கூட கொண்டு செல்லும்.
நிறைய திருமண ரேகைகள்
ஒருவரின் கையில் நிறைய திருமண ரேகைகள் இருந்தால், அவர்கள் அதிக ரொமான்டிக்கானவர்கள் மற்றும் நிறைய முறை காதலில் விழுந்து தோல்வியை சந்திப்பவராக இருப்பார்கள்.
திருமண ரேகையில் கிளைகள்
திருமண ரேகையின் முடிவில் கிளைகள் இருந்தால், அது உங்கள் துணை ஆரோக்கிய பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
திருமண ரேகையில் விரிசல்
திருமண ரேகைக்கு இடையே விரிசல் இருந்தால், அது திருமணத்திற்கு பின் சிறு பிரச்சனையால் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும்.
திருமண ரேகைகள் இல்லாமல் இருப்பது
திருமண ரேகைகள் இல்லாமலோ அல்லது அந்த ரேகை மேல் நோக்கி வளைந்து சுண்டுவிரலை தொடுமாறு இருந்தாலோ, அது வாழ்நாள் முழுவதும் சந்நியாசியாக வாழ வேண்டியதைக் குறிக்கிறது.
திருமண ரேகை கீழ் நோக்கி இருப்பது
திருமண ரேகை கீழ் நோக்கி வளைந்து இருந்தால், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஒரு நீளமான திருமண ரேகை
ஒரே ஒரு நீளமான திருமண ரேகை இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் அவர்களின் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக நீடித்து நிலைக்கும் என்பதைக் குறிக்கிறது.