பாலிவுட்டின் அழகு நாயகன் சல்மான் கான் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் காதல் கதை தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
அந்த அளவுக்கு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். பாலிவுட்டின்மிகப் பெரிய ஹாட் டாப்பிக்கா பேசப்பட்ட சம்பவம் கொஞ்ச நாளில் ஓய்ந்தது.
அதன்பின் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை பிரிந்து மற்றொரு பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை மணந்து செட்டிலானார். அந்த தம்பதிகளுக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், சல்மான் கானை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து ஐஸ்வர்யா ராய் நாளிதழ் ஒன்றிற்கு கூறியதாவது, சல்மானின் வன்முறை நடத்தை மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் காரணமாகவே அவரை விட்டு விலகினேன்.
இதுமட்டுமின்றி அவர் என் பெற்றோரிடமும் முரட்டுதனமாக நடந்து கொண்டார். அது என்னை மிகவும் பாதித்தது.
ஆனால் ஐஸ்வர்யா ராயை மறக்கவே முடியாத சல்மான் கான், அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், படப்படிப்பின் போது அதிரடியாக நுழைந்து அடி தடியில் ஈடுபட்டு ஜஸ்வர்யா காரை உடைத்துள்ளார்.
ஜஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் அதிக வரும் நேரத்தில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும் படி அவரை வலியுறுத்தி துன்புறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜஸ்வர்யா ராய்க்கு தெரியாமல் சல்மான் கான், தனது முன்னாள் காதலிக்கு உதவி செய்து வந்தது அவருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் ஜஸ்வர்யா ராய் கூறியதாவது, பிரிவிற்கு பின்னர், சல்மான் கான் போன் செய்து கேவலமாக பேசுவார். உடன் நடிக்கும் நடிகர்களுடன் தொடர்புள்ளதாக சந்தேகம் கொண்டார்.
பின்னர், அனைத்து நடிகருடனும் என்னை தொடர்பு படுத்தி பேசினார். பல முறை அவர் என்னை தாக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக எனக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர், எதுவும் நடக்காதது போல் நான் வேலைக்கு செல்வேன் என தெரிவித்துள்ளார்.