ஆனால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு விலகிவந்தார். இந்நிலையில், இதை ஈடுகட்டும் விதமாக மலையாளத்தில் மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மம்முட்டியை வைத்து ‘ராஜாதி ராஜா’ என்ற மலையாள படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘புலிமுருகன்’ படத்தின் கதாசிரியர் இப்படத்திற்கு கதை எழுதவிருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக முதலில் ராய் லட்சுமியைத்தான் படக்குழுவினர் அணுகியுள்ளார். ஆனால், ஒருசில காரணங்களால் ராய் லட்சுமி நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு வரலட்சுமிக்கு கிட்டியுள்ளது.
அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி ஏற்கெனவே நடித்த ‘ராஜாதி ராஜா’ படத்தில் ராய் லட்சுமிதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.