ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த முறை வித்தியாசமாக ஒவ்வொரு அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டங்களுக்கு முன்பாக அங்கு தனித்தனியாக தொடக்க விழா (மொத்தம் 8 விழா) நடத்தப்படுகிறது.
இதில், முதல் மற்றும் பிரதான தொடக்க விழா ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. லேசர் ஒளி வெள்ளத்துக்கு மத்தியில் முதலில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ‘ஜெய்ஹோ’ பாடலின் பின்னணியில் பேட்டரி காரில் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்த அவர்களுக்கு ‘தங்கபேட்’டை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வழங்கி பாராட்டினர்.
விழாவின் இறுதியாக பிரபல நடிகை எமிஜாக்சன் தங்க நிறை உடையில் கலக்கலாக நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவரது நடனத்தை காண சகிக்கவில்லை என நெட்டிசன்கள் புலம்பித் தள்ளியுள்ளனர். சிவப்பு மற்றும தங்க நிற ஆடையில் ஜொலித்தப்படி வான வேடிக்கைகள் வரவேற்க மைதானத்தில வலம் வந்த எமி கல செஷ்மா, ஓம் ஷாந்தி ஓம் ஆகிய பாடல்களுக்கு நடமாடினார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பியுள்ளனர். ரத்தக்கண்ணீரே வந்துடுச்சி என்றும், எமியின் டான்ஸ் மிக பரிதாபமாக, இருந்தது என்றும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.