சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் நிறைய போர் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெறப் போவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இப்படத்தில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினுக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், முதற்கட்டமாக ஸ்ருதிஹாசன் சண்டைக் காட்சிக்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டைப் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.