மனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்துவதற்கு முன்னதாகவே> 15 உயர் படையதிகாரிகள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பெயரிட்டுள்ளது.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் சிலர் போலிச் சாட்சியங்களை சமர்ப்பித்து இவ்வாறு படையதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு குற்றம் சுமத்திய புலித் தலைவர்களுக்கு சுவிட்சர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தாது, 15 படையதிகாரிகளை போர்க் குற்றவாளிகளாக பெயரிட்டுள்ளது.
மேலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் போர்க் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
படையதிகாரிகள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடையாளப்படுத்தியுள்ளது என்ற தகவலுக்கான உத்தியோகபூர்வ சான்றுகள் எதனையும் குறித்த சிங்கள ஊடகம் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.