Loading...
சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயம் இலங்கைக்கு தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
“சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளையொன்று கொழும்பில் அமைக்கப்படுவதற்கு எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. எதிர்காலத்தில் அவ்வாறான காரியாலயம் இலங்கையில் அமைக்கப்படக்கூடாது.
நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது எமக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்று நான் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Loading...