10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று புனேவில் நடந்த 2-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
185 ரன் இலக்கை நோக்கி விளையாடிய புனே அணியில் ரகானே- கேப்டன் ஸ்டீவன் சுமித் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே வெற்றிக்கு ஸ்டீவன் சுமித் காரணமாக இருந்தார். அவரை அஸ்வின் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில், “புனே அணியில் சுமித் பேட்டில் இருந்து வரும் கேட்சுகளை பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் சுமித்தை அஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோரும் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர்.
காயம் காரணமாக புனே அணியில் உள்ள அஸ்வின் இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை.