கிரிக்கெட் உலகின் முன்னாள் பிரபல வீரர்கள் தனது கனவு அணியை பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி, தனது கனவு அணியை பட்டியலிட்டுள்ளார்.
44 வயதான சவுரவ்கங்குலி வெளியிட்டுள்ள 11 பேர் கொண்ட அணியில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்ககாரா மற்றும் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நான்கு வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் மற்றும் தென்னாபிரிக்காவில் இரண்டு வீரர்களும், இங்கிலாந்தில் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளார்.
கங்குலியின் கனவு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:
மேத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா), அலைஸ்டர் குக் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா), சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ஜெக் காலிஸ் (தென்னாபிரிக்கா), குமார் சங்ககாரா (இலங்கை-விக்கெட் காப்பாளர்), முத்தையா முரளிதரன் (இலங்கை), ரிக்கி போண்டிங் (அவுஸ்ரேலியா), கிளொன் மெக்ரத் (அவுஸ்திரேலியா), டேல் ஸ்டைன் (தென்னாபிரிக்கா), ஷேன் வோர்ன் (அவுஸ்ரேலியா).