கிழக்கு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின் Hangzhou நகரைச் சேர்ந்தவர் ஜெங் ஜியா(வயது 31). இவர் ஆர்டிபிகல் இன்லிஜன்ஸ் படிப்பில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். ரோபாக்களை வடிவமைப்பது மற்றும் புதிதாக உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
இவர் தனக்கு ஏற்ற காதலியை தேடினார். ஆனால் இவர் விருப்பத்திற்கு ஏற்ற காதலி கிடைக்காத நிலையில் பெண் ரோபோவை உருவாக்கி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்காக Yingying என்ற பெண் ரோபோவை 30 கிலோ எடையில் வடிவமைத்தார்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ ஜெங் ஜியா மற்றும் Yingying இடையே திருமணம் நடந்துள்ளது .இந்த திருமணத்தில் ஜெங் ஜியாவின் தாயும் கலந்து கொண்டார். அந்த பெண் ரோபோவிற்கு பராம்பரியாமான கருப்பு சூட் மற்றும் சிவப்பு கலர் சால்வை அணிவித்து இருந்தார். பெண் ரோபோ இன்னும் நடக்கும் நிலையில் இல்லை. இதை விரைவில் நடக்கும் வகையில் அப்கிரேட் செய்யப்போவதாக ஜெங் ஜியா தெரிவித்துள்ளார்.
‘மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’ இந்த வரி சீன தம்பதிக்கு முற்றிலும் பொருத்தமாக இருக்கும்.