நிதி அமைச்சின் கீழ் மாவட்ட ரீதியில் இயங்கும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நியமனக் கடிதம் நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று வழங்கப்பட்டதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.
நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் வருமான கலால் திணைக்களம், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் முதலானவற்றை கண்காணிக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக இவர்களுக்கு சலுகைகளோ அல்லது மேலதிக கொடுப்பனவோ வழங்கப்படவில்லைஎன்றும், சுயமாகவே இந்த பணியில் அவர்கள் ஈடுபவதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.