நடிகை பாவனா என்றாலே அனைவருக்கு நினைவில் வருவது தற்போது அவர் சந்தித்த ஜீரணிக்க முடியாத பிரச்னையே… அவர் கடத்தப்பட்டதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் சினிமா வட்டாரத்தையே கதிகலங்க வைத்தது…
தற்போது அந்த பிரச்னையில் இருந்து வெளிவந்து தனது காதலித்த நபரோடு நிச்சயதார்த்தமும் அண்மையில் நடந்தேறியது. இதுஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அவருக்கு அபார்ஷன் ஆனதாக கூறப்பட்டு வருவது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மலையாள படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல மலையாள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் 15 வயதில் நடிக்க வந்தேன். நடிக்க வந்த காலத்தில் இருந்து என்னைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக அபார்ஷன் கிசுகிசுக்கள் தான்.
வருஷா வருஷம் குறைந்தது பத்து முறையாவது எனக்கு அபார்ஷன் ஆனதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் நான் அமெரிக்கா, அலுவா, திருச்சூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அபார்ஷன் செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.
பட வாய்ப்புக்காக நான் பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்தேனாம், கர்ப்பமானேனாம், கருவை கலைத்தேனாம். அப்பா எத்தனை எத்தனை கிசுகிசுக்கள் வந்தன.
நான் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவள். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளது. ஆனால் அதற்காக நான் என் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் பாவனா.