KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ்
சாண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார்.
பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது.
பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார்.
இத்தனை வருடத்தில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என அவருக்கு தோன்ற வாழ பிடிக்காமல் தற்கொலை முயற்சி செய்து பின்னர் காப்பற்றப்பட்டார்.
பின்னர் அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அவருக்கு $105 நன்கொடை கிடைத்தது.
பின்னர் தனக்கு பிடித்த உணவுகளை வைத்தே பெரிதாக சாதிக்க வேண்டும் என அவருக்கு திடீர் ஞானோதயம் வந்தது.
சிக்கன் செய்வதில் வல்லவரான சாண்டர்ஸ் புது விதமாகவும் மிகவும் சுவையாகவும் அதை செய்தார்.
பின்னர் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளிலும், உணவகங்களிலும் விற்க முயற்சி செய்தார்.
உணவங்களின் முதலாளிகள் முன்னரே சிக்கனை செய்து அசத்தினார். ஆனாலும் ஆயிரம் முயற்சிக்கு பின்னரே அவருக்கு வெற்றி கிடைத்தது.
பின்னர் அவரின் உணவு மிக பிரபலமடைய தொடங்கியது. பின்னர் Sanders Court & Café என்னும் பெயரில் உணவகம் தொடங்கினார்.
இது தான் பின்னாளில் உலக புகழ்பெற்ற KFC உணவகமாக மாறியது.
பின்னர் 1964ஆம் வாக்கில் 72வது வயதில் தனது நிறுவனத்தை $2 millionக்கு விற்றார். ஆனாலும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளராக நீடித்து வந்தார் சாண்டர்ஸ்.
பின்னர் தனது 80வயதில் உலக கோடிஸ்வரர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
1976ல் சாண்டர்ஸ் உலகின் இரண்டாம் பிரபலான மனிதர் என போற்றப்பட்டார்.
கடந்த 1980ல் தனது 90வது வயதில் சாண்டர்ஸ் மரணமடைந்தார். 65 வயதில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த சாண்டர்ஸ் சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் என்றால் அது மிகையல்ல!