சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு நான்கு நாள் நாடாளுமன்ற அமர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சித்திரைப் புதுவருடத்தின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், தற்போது குறித்த நான்கு நாட்களிலும் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படமாட்டாது.
எதிர்வரும் மே மாதம் 3ம், 4ம் மற்றும் 5ம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மே மாதம் 2ம் திகதி நடைபெறவிருந்த அமர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.