நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைச் சேர்க்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டியவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
பாசத்தோடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும் நாள். இடமாற்றம் இனிமை தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
குடும்பச் சுமை கூடும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
நீண்டநாளைய ஆசை நிறைவேறும் நாள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும். நண்பர்களின் உதவியோடு நல்ல காரியம் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர் வருகை உண்டு.
கையாளும் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
வளர்ச்சி கூடும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். செல்வந்தர்களின் ஒத்துழைப்புடன் செயல்பாடுகளில் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். எதிரிகள் விலகுவர். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும்.
தேக நலனில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையலாம்.
திருமணத் தடை அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபாரப் போட்டிகள் அகலும். விருந்தினர் வருகை உண்டு.