இந்த காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டு கொண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நமது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் தான்
முக்கியமாக ஜங்க் உணவுகளின் மீதுள்ள மோகத்தாலேயே பலரது ஆரோக்கியம் பாழாகிவிட்டது எனலாம். ஆனால் இயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக ஒருசில பழங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும்.
இங்கு நம்மில் பலர் சந்திக்கும் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத ஜூஸ் உள்ளது.
தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெர்ரி – 4-5
- ஆரஞ்சு – 2
- சியா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
முதலில் ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் 2 ஆரஞ்சு பழத்தின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
இறுதியில் நீரில் 15 நிமிடம் ஊற வைத்த சியா விதைகளை, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார்.
இந்த ஜூஸை தினமும் 1/2 டம்ளர் குடித்து வந்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்
இந்த ஜூஸைக் குடிப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை, இதய நோய்கள், தலைவலி, உடல் வலி போன்றவைகளில் இருந்து விடுபடுவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் இளமையும் தக்க வைக்கப்படும். முக்கியமாக இந்த ஜூஸை தினமும் குடித்தால், சரும நிறம் அதிகரிக்கும்.
மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இந்த ஜூஸை அன்றாட உடற்பயிற்சி மற்றும் டயட்டைப் பின்பற்றி குடித்து வந்தால், உடல் எடையிலும் விரைவில் மாற்றத்தைக் காணலாம்.