எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலைச் செய்கை ரத்து செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
2030ம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும்.
புகையிலைச் செய்கைக்கு பதிலீடாக வேறு பயிர்கள் அறிமுகம் செய்யப்படும்.
புகையிலை உற்பத்திப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய புற்று நோய்களுக்கான சிகிச்சைக்காக வருடாந்தம் ஐந்து பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுகின்றது.
புற்று நோய்க்கு பாக்கு பயன்பாடும் ஓர் காரணம் என்பதனால் எதிர்காலத்தில் பாக்கு பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாய்ப் புற்று நோயினால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.