தமிழ்மொழியை பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து பி.பி.சிக்கு கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஈழத் தமிழர்கள் தமிழ் மொழியை பாதுகாத்துக் கொள்வதற்காக பாரிய பிரியத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் உலகெங்கிலும் புலம்பெயர்ந்துள்ள போதிலும் தமது பிள்ளைகளுக்கு தமிழை கற்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டுக்கின்றனர். எனினும் இந்தியர்கள் தமது தாய்மொழியை பாதுகாக்க தவறி வருகின்றனர்.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தும் அந்த துடிப்போடு செயற்படும் போது, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழை வளரக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பது கவலையளிக்கிறது.
தற்கொலை எண்ணத்தை தடுக்கும் நோக்குடன் எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவிலுள்ள 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலை பொறுத்த வரை தமிழ் மொழியே முன்னிற்கின்றமை பெருமையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இந்த விருதுக்கு கவிஞர் வைரமுத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இதே விருதுக்காக ஏழாவது முறையாக வைரமுத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.