அரவிந்த்சாமி மாதிரி ஒரு அழகான மாப்பிள்ளை வேணும்’ என இன்றளவும் பெண்கள் மத்தியில் ஆணழகனாக திகழ்ந்து வரும் நடிகர் அரவிந்த்சாமி சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை அரவிந்த்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் முத்துராமன் என்ற நபர் பங்கேற்றுள்ளார். மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த அவரது கதையை கேட்டு அரவிந்த்சாமி வருத்தமடைந்துள்ளார்.
முத்துராமன் 25 லட்ச ரூபாய் வெல்ல வேண்டும். இதன் மூலம் அவரது ஏழ்மை நீங்க வேண்டும் என அரவிந்த்சாமி எண்ணியுள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக முத்துராமன விளையாட்டில் இருந்து வெறுங்கையுடன் விலக நேரிட்டது. இதை பார்த்து அரவிந்த்சாமி ரொம்ப கோபப்பட்டாராம். உடனே கோபத்தை கட்டுப்படுத்திய அரவிந்த்சாமி நிகழ்ச்சி முடிந்ததும் முத்துராமனை நேரில் சந்தித்துள்ளார்.
நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்காக அவருக்கு ஆறுதல் கூறிய அரவிந்த்சாமி தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய தொகைக்கான காசோலையை கொடுத்து அனுப்பியுள்ளார். இதை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்ப வேண்டாம் என்றும் நடிகர் அரவிந்த்சாமி கேட்டுக் கொண்டாராம்.