Loading...
வாக்கு பெறுவதற்காக பணம் வழங்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையகம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
அத்தோடு, பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என பலர் நினைகின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுசூதனன் தனது பிரசாரத்தில், தன் 30 வருடத்துக்கு மேலாக அரசியல் மற்றும் பொதுநல பணிகளை செய்து வருகிறேன் என்று கூறுகிறார். ஆனால் ஆர்.கே.நகர் முன்னேறி உள்ளதென்றால் அதற்கு காரணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே என்று தீபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...