எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகளாவு சாப்பிடுவதால் உடல் எடையானது அதிகரிக்கிறது. கொழுப்பு உடலில் அதிகமாக சேர்ந்து தொப்பை உண்டாகிறது.
உடல் பருமனால் ஏற்படும் தொப்பையினை குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றினை மேற்கொள்வோம். ஆனால் அன்னாசி பழத்தின் மூலமாக மிக எளிதாக தொப்பையினை 10 நாளில் குறைக்க இயலும்.
தொப்பையை குறைக்க
தொப்பையினை கரைக்கும் சக்தி வாய்ந்தது அன்னாசிப் பழம். ஒரு அன்னாசிப்பழத்தினை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் நான்கு ஸ்பூன் ஓமத்தினை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இரவில் இதை செய்து மறுநாள் காலை இதை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
இதனை தவிர்த்து நாம் அருந்தும் நீரில் சோம்பினை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.
நாம் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் கொழுப்பு சேராது.
பப்பாளி காயை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும்.
சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறி கொழுப்பு கரைத்து தொப்பையினை குறைக்கும்.