பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தில் பருக்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக மெனக்கெடுவார்கள்.
உண்ணும் உணவில் இருந்து உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருள்கள் வரை பார்த்து பார்த்து பயன்படுத்துவார்கள்.
ஆனால் முகப்பரு இல்லாதவர்களை காட்டிலும் முகப்பரு உள்ளவர்கள் அதிக காலம் இளமையாகவே தோற்றம் அளிப்பதாக ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகப்பருக்கள் உள்ள மற்றும் அல்லாத பெண்களின் மரப்பணுக்களை சோதித்து பார்த்ததில் முகப்பருக்கள் உள்ள பெண்களின் செல்கள் மிக பொலிவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பருக்கள் கொண்ட பெண்களின் குரொமோசோம்களில் டெலோமியர்ஸ் என்னும் மரப்பணுக்களை பாதுகாக்கும் செல்களின் நீளமானது அதிகமாக உள்ளது.
இதன் காரணமாகவே முகப்பருக்கள் உள்ள பெண்கள் முகப்பருக்கள் இல்லாதவர்களை காட்டிலும் இளமையாக தோற்றமளிக்கின்றனர்.
ஆய்விற்காக இந்த செல்களை வெட்டி துண்டாக்கும் போது அவை செயலிழப்பதாகவும், இதனால் வயது முதிர்வு, புற்றுநோய் உள்ளிட்டவை எளிதில் பாதிப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.