கல்லூரி மாணவி ஒருவர் தனது தந்தையின் நண்பரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ள சம்பவம் அவளது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் படித்து வந்த இந்த மாணவிக்கு வயதில் மூத்த ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவளது தந்தையின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி, வீட்டுக்கு வரும்போது, தந்தையின் நண்பருடன் நெருங்கிய பழகிய இவளுக்கு, அவரின் குணநலன்கள் பிடித்துப்போகவே அவர் மீது காதல் வயப்பட்டுள்ளாள்.
ஆனால், எங்கே வெளியில் சொன்னால் நம்மை தவறாக நினைத்துக்கொள்வார்களோ என அஞ்சி மனதுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்துள்ளாள்.
இந்நிலையில், கல்லூரி படிப்பு நிறைவடைய இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைபெற்றது.
இதை அறிந்த இவள், தனது பெற்றோரிடம் சென்று, நமது வீட்டுக்கு வரும் தந்தையின் நண்பரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளாள்.
இதனைகேட்ட அவளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் மகளுக்கு அறிவுரை வழங்கி, நீ செய்வது தவறு என்று வலியுறுத்தியபோதும், தனது பெற்றோர் சொல்வதை அவள் கேட்க மறுத்து பிடிவாதமாக இருந்துள்ளாள்.
இதனால் சிறிது இடைவெளி விட்டால் தங்கள் மகளிடம் மாற்றம் தெரியும், அதன் பின்னர் திருமணம் செய்துவைக்கலாம் என பெண் பார்க்கும் படலத்தை தள்ளிவைத்துள்ளனர்.
வீட்டிற்கு வரும் தந்தையின் நண்பருக்கு திருமணம் ஆகவில்லை, அவர் ஒரு பிரமச்சாரி ஆவார்.