இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதும். காற்றின் அளவு குறைந்தமையும் காரணமாகவே நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுகிறது.
இந்த நிலையில் குறித்த காலநிலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சூரியனின் உச்சம் இலங்கைக்கு மேல் தொடர்வதே இதற்கான காரணமாகும். இன்று சூரியன் இலங்கையின் பங்கதெனிய, வாரியபொல உட்பட்ட வடமேற்கு பகுதிகளின் சில இடங்களுக்கு மேலாக நேரடியாக உச்சம் கொடுத்தது.
எனினும் இந்தியாவை போன்று 40 செல்சியஸ் அளவிலான வெப்ப அளவீடு இருக்கவில்லை. பொலநறுவையில் ஆகக்கூடுதலாக 35 செல்சியஸ் வெப்பமே பதிவானது.
யாழ்ப்பாணம், கொழும்பு, ரத்தினபுரி வவுனியா ஆகிய இடங்களிலும் 35 செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்தநிலையில் இன்று கொழும்பின் சில இடங்களில் சிறிய மழைப்பொழிவு நிகழ்ந்தது.