தனது உத்தியோகபூர்வ வாகனத்திற்கு இடையில் புகுந்து சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரித்துள்ளார்.
குறித்த சாரதி, சீன மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவன் எனவும், அவர் தவறான முறையில் வாகனம் ஓட்டவில்லை எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ராஜகிரிய பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வாகன பேரணிக்கு இடையில் குறுக்கிட்டு சென்றது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெலிக்கடை பொலிஸாரிடம் மேற்கொண்ட விசேட முறைப்பாட்டிற்கமைய அந்த மோட்டார் வாகனத்தை ஓட்டிய மருத்துவ பீட மாணவனை கைது செய்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து விடுவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொள்வதற்கு அவசியமற்றது. தவறான நோக்கத்தில் குறித்த மாணவன் வாகனத்தை ஓட்டவில்லை என மஹிந்த ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.