பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கேப்பாபுலவு மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இருக்கும் இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என மக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இடம்பெற்றும் உணவு , நீர் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றையதினமும் (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனுடன், செயலாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளச்செழியன், லவகுசன், மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்,
“மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினை வெளியேற்றுவதற்கு மாவட்டசெயலாளரும், பிரதேச செயலாளரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்.
சட்டத்திற்கு முரணாகவே இராணுவத்தினர் குறித்த காணிகளை ஆக்கிரமித்துள்ளனர். அனைத்து அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளவேண்டும். அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே மக்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாகவே மக்கள் தொடர் போராட்டத்திலும் உணவு, நீர் தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு அரசியல்ரீதியான தீர்வை கோரி நிற்கின்றார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.