வீடியோதளமான யூடியூப் Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசதிகளுடன் பீட்டா வெர்சன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலகளவில் வீடியோதளங்களின் வரிசையில் யூடியூப் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டு முதலிடம் வகிக்கிறது.
தற்போது Youtube Go என்னும் பீட்டா வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.
இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடிகிறது.
Youtube Goவின் சிறப்பம்சங்கள்
எந்தவொரு வீடியோவையும் ’சேவ்’ செய்து வைத்து இண்டர்நெட் இல்லாத போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
டவுன்லோடு செய்த வீடியோக்களை டேட்டா இல்லாத நேரத்திலும் அனுப்பிக் கொள்ளலாம்.
ஆனால் Youtube Go மூலம் வீடியோவைப் பெற நினைப்பவரும் இந்த பீட்டா அப்ளிகேஷன் வைத்திருக்க வேண்டும்.
ஆங்கிலம், தமிழ் உட்பட 7 மொழிகளில் இந்த ஆப்ஸை பயன்படுத்த முடியும். இந்த வசதி இந்தியாவில் மட்டும் தற்போது அறிமுகமாகியுள்ளது.