Loading...
வீதியில் குப்பை போடுவது சூழலை அசுத்தப்படுத்துவதோடு, இலங்கை சட்டத்திற்கமைய அது சட்டவிரோத செயலாகும்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு மொரட்டுவை பொது சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
அதற்கமைய வீதியில் போடப்பட்டிருந்த குப்பையிலிருந்த பையை சோதனையிடும் போது கிடைக்கப்பெற்ற தொலைப்பேசி பற்றுச்சீட்டு ஊடாக பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து வீதியில் குப்பை கொட்டிய பெண் மற்றும் இரண்டு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொரட்டுவை பொலிஸ் சுற்று சூழல் மற்றும் மேலும் சில குழுக்கள் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...