ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பட்சத்தில் அங்கு நானே வெற்றி பெறுவேன் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொருளாளர் தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டமை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஜனநாயகம் பாதுகாப்பட வேண்டும் என்றால் பண விநியோகத்தில் ஈடுபட்டவர்களை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்து 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்.
தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகரில் பண விநியோகம் செய்துள்ளார். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தினகரனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
பண விநியோகம் உண்மை என்பதை கண்டறிந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.