லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகளும் நேற்றைய தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வு தொடர்பான செய்திகள் கொழும்பு மற்றும் யாழ். பிராந்தியத்திலிருந்து இன்றைய தினம் வெளியாகியுள்ள நாளேடுகளில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன.
குறிப்பாக தினக்குரல் நாளேட்டின் முன்பக்கத்தில், இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பயனாளி ஒருவருக்கு வீட்டின் திறப்பை கையளிக்கும் புகைப்படத்துடன் கட்டமிடப்பட்ட செய்தியாக இதனை பிரசுரித்துள்ளது.
அத்தோடு, ‘லைக்கா ஞானம் அறக்கட்டளையின் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு’ என்ற தலைப்பில், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, அதன் நிறுவுனர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் சிறப்பு அதிதிகளின் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து “புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு எடுத்துக்காட்டு” என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியும் தினக்குரல் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக தேசிய நாளேடான தினகரன், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் வீடுகள் கையளிக்கப்பட்ட செய்திக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி ஆகியோரின் உரைகளை முன்பக்கத்தில் புகைப்படங்களுடன் பிரசுரித்துள்ளது.
அத்தோடு, ‘லைக்கா ஞானம் அறக்கட்டளை: பாதிக்கப்பட்ட மக்ளுக்கு வவுனியாவில் 150 வீடுகள் கையளிப்பு’ என்ற தலைப்பில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர், நிறுவுனர் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு வீடுகளை கையளித்த அதிதிகளின் புகைப்படங்களை தாங்கிய பிறிதொரு செய்தியையும் தினகரன் வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக இன்றைய தினம் வெளியாகியுள்ள சுடரொளி நாளேடானது, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் வீடுகள் கையளிக்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந் நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உரையை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளது.
அத்தோடு, இன்றைய வீரகேசரி நாளேடும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உரையுடன், லைக்கா ஞானம் அறக்கட்டனையின் வீடுகள் கையளிக்கப்பட்ட நிகழ்வை தனது முன்பக்கச் செய்தியில் பிரசுரித்துள்ளது.
தொடர்ந்து யாழ். பிராந்தியத்தில் இன்றைய தினம் வெளியாகியுள்ள உதயன், வலம்புரி மற்றும் காலைக்கதிர் ஆகிய மூன்று நாளேடுகளும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் வீடுகள் வழங்கப்பட்டமை தொடர்பான செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவுனர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் மேடையில் உரையாடும் ஒரு புகைப்படத்துடன், எதிர்க்கட்சித் தலைவரின் உரையை காலைக்கதிர் நாளேடு பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளது.
அத்தோடு, ‘லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அறிவிப்பு: வடக்கு, கிழக்குக்கு ரூ.20 கோடியில் விசேட சுகாதாரத் திட்டம் தயார்! – பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தம் 600 வீடுகள்’ என்ற தலைப்பில் கட்டமிடப்பட்ட செய்தியாக காலைக்கதிரின் முன்பக்கத்தில் பிறிதொரு செய்தி வெளியாகியுள்ளது.
இச் செய்தியில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் நேற்றைய தினம் வவுனியாவில் தெரிவித்த கருத்துக்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கென பிரித்தானியாவிலிருந்து வருகை தந்திருந்த அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி தெரிவித்த கருத்துகளையும் இன்றைய காலைக்கதிர் நாளேடு வெளியிட்டுள்ளது.
அதேபோன்று இன்றைய உதயன் நாளேடும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் வீடுகள் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அதிதிகளான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி ஆகியோரின் உரைகளுடன், லைக்கா கிராமம் குறித்தும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, ‘ரூ.200 மில்லியனில் சுகாதாரத் திட்டம் – லைக்கா விருப்பம்’ என்ற தலைப்பில் உதயன் நாளேட்டின் முன்பத்தில் பிறிதொரு செய்தி வெளியாகியுள்ளது.
இவற்றை ஒத்ததாகவே இன்றைய வலம்புரி நாளேடும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் 150 வீடுகள் உள்ளடங்கிய லைக்கா கிராமம் வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வு தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி ஆகியோரின் உரைகளை வெளியிட்டுள்ளதோடு, குறித்த செய்திகளில் நேற்றைய தினம் வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் கையளிக்கப்பட்ட லைக்கா கிராமம் தொடர்பான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையானது கடந்த காலங்களில் பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்தது. எதிர்காலத்தில், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக வீடுகளோடு, சுகாதார வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளை வழங்கும் இவ் உதவிகள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவற்றிலிருந்து மீள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்குமென சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.