உலக புகழ் பெற்றது திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி திருக்கோவில். அக்கோவிலின் கட்டுமானமும் பொக்கிஷ அறைகளும் அனைவரையும் பிரமிக்க வைக்கக்கூடியதாகும்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள இந்த பத்மனாபசுவாமி கோவிலானது விஷ்ணுவிற்காக கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் பத்மனாபசுவாமி சயனநிலையில் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதை போன்று இருப்பார்.
பத்மனாபசுவாமி திருக்கோவிலானது திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலுடன் அதிகளவு ஒத்துள்ளதால் கோவில் அமைந்துள்ள இடம் திருவனந்தபுரம் என்னும் பெயர் பெற்றது.
16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலானது தற்போது திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருவிதாங்கூர் மன்னர்கள் சேரர்கள் எனவும் குலசேகர ஆழ்வாரின் வழிதோன்றல்கள் எனவும் கூறுகின்றனர். இம்மன்னர்கள் கேரள தமிழ் கலந்த முறையினையே பின்பற்றுகின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் வேட்டி, சேலை, தாவணி போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு உள்ளது.
இந்த கோவிலின் சிலையானது கண்டகி நதியில் கிடைக்கும் சாலிகிராம் என்னும் ஒரு வகை கூழாங்கல்லினால் செய்யப்பட்டது. மொத்தம் 12 ஆயிரம் சாலிகிராம் கற்களானது பயன்படுத்தப்பட்டுள்ளது, இது மிக சக்தி வாய்ந்ததாகும்.
விஷ்ணு இந்த கற்களில் தன் சக்கரத்தினையும் சங்கின் வடிவத்தினையும் வரைவதாக ஐதீகம்.
இந்த கோவிலின் விமானத்திற்கு முன்னதாக இருக்கும் நடைமேடையானது ஒரே கல்லினால் அமைக்கப்பட்டதாகும். இங்கு உள்ள மூன்று கதவுகளின் வழியாக பத்மனாபசுவாமியை தரிசிக்க முடியும்.
பத்மனாபசுவாமி கோவிலில் உள்ள ஐந்து மர்ம அறைகளுள் மூன்றினை திறந்து பார்த்தபோது கிட்டதட்ட 3 இலட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் கண்டறியப்பட்டது.
500கிலோ மதிப்புடைய தங்க நகைகளும் 18அடி உயரம் கொண்ட பையிலிருந்து தங்ககாசுகளும் கைப்பற்றப்பட்டது.
திறக்கப்படாத அறையில் இதைவிட 5மடங்கு மதிப்பிலான பொருள்கள் உள்ளதென கூறுகின்றனர்.
ஆனால் இந்த அறையானது பத்மனாபசுவாமியின் கட்டுபாட்டில் உள்ளதாகவும் அந்த அறையினை திறந்தால் உலகம் அழிந்துவிடுமென அரச குடும்பத்தினர் நம்புகின்றனர்.