Loading...
வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர்.
இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்துள்ளது என்பது குறித்த முழு தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இவ் அதிரடி சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Loading...
சரத்குமார் வீட்டில் கிடைத்த ஒருசில ஆவணங்களின் அடிப்படையில் ராதிகாவின் அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...