தமிழகம் கடலூர் மாவட்டத்தில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது.
இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி பொலிஸார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ரமேஷின் மனைவியை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிரைண்டர் கல்லை கணவரது தலையில் போட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
எனினும், திருமணமாகி ஒன்பதே நாளில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.