பொலநறுவையில் தந்தையின் கழுத்தை நெரித்த மகனை தாய் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
பக்கவாதம் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தந்தையை, கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தை நெரித்த மகன், தாயாரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிசிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹிகுரக்கொட, யோதஎல என்ற பகுதியை சேர்ந்த சியம்பலாகஸ் நென்னே கெதர காமினி சிசிர குமார என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் குடிபோதையில் தனது தந்தை மற்றும் தாயை தினமும் கொடுமைப்படுத்துபவர் எனவும், இந்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அவ்வாறு குடிபோதையில் வந்துள்ள நிலையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கட்டிலில் இருந்து கிழே தள்ளிவிட்டு, தாயினை கழுத்தை நெரித்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாய் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தர்பத்தில் தனது பாதுகாப்பிற்காக அருகில் இருந்த தடியினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதலில் காயமடைந்த தாய் மற்றும் மகன் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மகன் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.