அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதனால் சிரியா பகுதியில் இரு நாடுகளும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்காவுக்கும், தங்களுக்குமுள்ள இராணுவ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனால் அந்நாடுகளுக்குள் மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே, சிரியா தொடர்பாக, ‘குறுக்கிடாத வழித்தடங்கள்’ (Deconfliction channels) என்ற ஒரு நடைமுறை 2015-ல் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி வடகிழக்கு சிரியா பகுதியில், அமெரிக்க மற்றும் ரஷ்ய விமான ஓட்டிகள் தங்கள் விமானங்களுக்கு இடையே கணிசமான இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது.இதற்காக ‘ஹாட்லைன்’ வசதி2 நாடுகளுக்கிடையே உருவானது. இந்த வசதியை இப்போது ரஷ்ய அதிபர் துண்டித்திருக்கிறார்.
இதனால் ரஷ்ய, அமெரிக்க விமானங்கள் சிரியா வான்வெளியில் மோதலில் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
மேலும், அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க இராணுவ அமைப்பான பென்டகன், ரஷ்யாவுடனான ‘ஹாட்லைனை’ மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.