Loading...
கிளிநொச்சி சேவயர்கடைச் சந்திக்கு அருகில் வாகனம் விபத்திற்குள்ளானதில் திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
21 வயதான மேற்படி யுவதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading...
வாகனத்தின் பின்பகுதியில் எட்டு பேர் பயணித்த நிலையில் குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சாரதி தப்பி சென்றுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...