Loading...
மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக மாணவ-மாணவிகளிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதான பட அதிபர் மதன் தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்தநிலையில் அமலாக்கப்பிரிவினர், மதன் மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Loading...
நேற்று இந்த வழக்கு தொடர்பாக மதனிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரிய வரும் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Loading...