Loading...
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு மாதம் குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
Loading...
எலுமிச்சை சாற்றினை சுடுநீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்க உதவுகிறது.
- சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளை எளிதில் தடுக்கலாம்.
- சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கிறது.
- சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
- உடற்பயிற்சி செய்வதால், வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்து செய்ய வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் உதவுகிறது.
Loading...