சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இயற்கையில் பல அற்புத பொருட்கள் உள்ளது.
அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடாவில் உள்ள ஏராளமான உட்பொருட்களால், சுத்தப்படுத்தும் பொருளாகவும், அழகுப் பராமரிப்பு மற்றும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது எப்படி?
முதலில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நாக்கிற்கு அடியில் வைத்து கரைய விட வேண்டும்.
மறுநாள் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை 1.5 லிட்டர் நீரில் கலந்து, அதை 2-3 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.
ஆய்வு
ராயல் லண்டனில் உள்ள ஓர் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள், இதனை முதலில் சோதித்தனர்.
அதில் உடலில் சோடியம்-பை-கார்பனேட் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்களின் தாக்கம் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆராய்ச்சி செய்த போது, பேக்கிங் சோடா சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர்.
நன்மைகள்
- பேக்கிங் சோடா உடலில் pH அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சையின் போது, சிறுநீரக நோய் தீவிரமடைவதைக் குறைக்க உதவுகிறது.
- பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சரும அழற்சியுள்ள இடத்தின் மீது தடவினால் குணமாகும்.
- பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம்-பை-கார்பனேட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஏனெனில் இது கணையம் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.